என்ன காய்கறி எல்லாம் இந்த வெல விக்குது!!! என்னதான் பண்றது!!!
சாம்பார் பொரியல் எல்லாம் வைக்கறதா இல்லியா ஒன்னும் தெரியில, இந்த கவர்மென்ட்டு என்னதான் பண்ணுது,
இந்த வருஷம் எலக்ட்ஷன் மட்டும் வருட்டும் பாரேன், நான் எதிர்கட்சிக்குதான் வோட்டு போட போறேன், பின்ன என்ன.
ஆமான் அவன் வந்தா மட்டும் என்ன பண்ண போறான், அவனுங்களும் கொள்ள தான் அடிப்பானுங்க, எவன் நம்ம கஷ்டத்த போக்க போறான் என்று புலம்புவரா நீங்கள்.
கொஞ்சம் நியூஸ் எல்லாம் சீரியல் வெளம்பர இடவேலையில லேசா கேக்குற ஆளா இருந்தா, இன்னும் கொஞ்சம் கேள்வி வரும்
"ஏம்ப்பா, இந்த கவர்மெண்டுதான் இந்த விவசாயிகளுக்கு எம்மா சலுக பண்ணுது" கரண்டு ப்ரீயாம், உரம் மானியம் தருதாம், வெத அப்புறம் லோன் எல்லாம் தள்ளுபடி பண்றாங்க,
எங்க பக்கத்து வீட்டுகாரன்களோட சொந்தகாரங்களுக்கெல்லாம் நாப்பதாயிரம் அம்பதாயிரம் தள்ளுபடியாம் அவுங்க சம்சாரம் செயின் வாங்கி போட்டு இருக்குன்னு சொல்லறாங்க.
"நமக்கும் கொஞ்ச நெலம் இருந்தா ஊருக்கு போய் விவசாயம் பாக்கலாம் போல இருக்கு" என்று சொல்லுபவரா உங்களுக்காகவே இந்த பகுதி.
இதற்கு நீங்கள் முதலில் விவசாயம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
"சும்மா நிறுத்துப்பா அப்ப பிளைட்டுல போகனுன்ன பிளைட் ஓட்ட தெரியனுமா" என்று நீங்கள் சொல்லுவது எனக்கு கேட்கிறது.
இன்னும் சில பேர் "ஹலோ நாங்கெல்லாம் மம்புட்டிய தூக்கி பாத்துட்டு முடியாமதான் இங்க வந்து இந்த வேலை பாக்குறோம் நீ சும்மா நிறுத்தப்பா" என்றும் சொல்லலாம்.
ஆன என்ன பண்ண இது ப்ளாக் என்ன தடுத்து நிறுத்த முடியாது, முடிஞ்சா படிச்சு பாத்துட்டு "என்னமோ எழுதி இருக்கார் நாமளும்தான் கருத்து சொல்வோமே" என்று உங்கள் கருத்துக்களை சொன்னால் எனக்கு சந்தோஷமே.
இனி வரும் அத்தியாயங்களில் விவசாயம் பற்றி பார்போம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக