இது நீண்ட நாட்களாகவே என் மனதில் தோன்றிய ஒரு விஷயம், சில நேரங்களில் எரிச்சல் சில நேரங்களில் ஆத்திரம் சில நேரங்களில் இயலாமை சில நேரங்களில் கோபம் ஆனால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதுதான் உண்மை.
ஒன்னும் இல்லைங்க எந்த டிராபிக் சிக்னல் படுத்தும் பாடுதான், நம்ம ஊரில சிக்னல் ஒழுங்க இருந்தாலே யாரும் மதிக்க மாட்டங்க, இதுல எப்ப வொர்க் ஆகும் எப்ப வொர்க் ஆகாதுன்னே தெரியாது, நான் ரொம்ப நாள் கழிச்சுதான் அத கண்டு புடிச்சேன், காலையில நீங்க அவசரமவசரமா ஆபீஸ் போகும் பொது இந்த கிண்டி பாலத்த தான்ற வரைக்கும் ஒன்னும் தெரியாது பாலத்து மேல ஏறி ஏறங்குவீங்க பாருங்க அப்ப கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் நிக்கும் வண்டி, எனக்கு அப்பல்லாம் கம்பராமாயனத்துல ராமன் கூட போன குரங்கு ஞாபகம் தாம் வரும், ஒரு வண்டி குறுக்கால நாலஞ்சு வண்டிக அத சுத்தி நின்னுகிட்டு யாராலையும் போகமுடியாத மாதிரி ஒரு தினுசான கோணத்துல நிப்பாங்க, ஆனா சும்மா சொல்லக்கூடாது நம்ம ஆளுங்க தெறமையே தனி ஒரு நாள் நின்ன கோணத்துல மறு நாள் நிக்க மாட்டாங்க.
அதிலேயும் இந்த ஆட்டோ காரர்கள் ஓட்ற விதம் அப்பப்பா, எனக்கு மட்டும் இதை மூணு சக்கரத்தில ஓட்டலாம்னு கண்டுபிடிச்சது யார்னு தெரிஞ்சதுன்னு வைச்சுக்குங்களேன் என்ன பண்ணுவேன்னு கேட்குறிங்களா ஒண்ணுயம் பண்ண மாட்டேன், அவர கூட்டிட்டு வந்து சிக்னல் வேலை செய்யாத நேரத்த பாத்து கிண்டி பாலத்துல இருந்து அசோக் பில்லர் வரைக்கும் டெய்லி பத்து தரவ பைக் ஓட்ட சொல்லுவேன்.
எதுல என்ன கொடுமைன்ன இந்த சிக்னல் அப்ப அப்ப வேலை செய்யலன்னு அங்க நிக்கிற போலீஸ்க்கு தெரியும் இருந்தாலும் எது அவர்களை தடுக்குதுன்னு எனக்கு தெரியலை.
இது குறித்து கவலைப்பட யாருக்கும் நேரமில்லை, வாழ்க்கையை எப்படி ஓட்டுவது என்பதே பெரிய பிரச்சனையாய் இருக்கையில் எந்த டிராபிக்கில் வண்டி ஓட்டுவது ஒரு பெரிய பிரச்னை இல்லை என்று அவர்கள் நினைத்து இருக்கலாம்.
பரிணாம வளர்ச்சியில் மனிதன் முதுகெலும்பை இழக்கபோகிறானோ என்பதற்கு இது போன்ற நிகழ்வுகளே சாட்சியாய் இருக்கின்றன, உண்மையாய் முதுகெலும்பை இழப்பதுதான் இழப்பதல்ல
இதுபோன்றவற்றுடன் வழ்வதுகூட முதுகெலும்புடன் இல்லாமல் வாழ்வதற்கு ஒப்பானதே(என்னையும் சேர்த்துதான்).
இந்த வலைப்பதிவில் தேடு
சனி, 18 செப்டம்பர், 2010
பிள்ளையார் சதுர்த்தி
பிள்ளையார் சதுர்த்தி
இப்பொழுதெல்லாம் பிள்ளையார் சதுர்த்திக்கு பெரிய பெரிய பிள்ளையார் சிலைகளை வைத்து வழிபட்டு அவற்றை கடலில் கரைப்பது வழக்கமாகிவிட்டது.
நீங்கள் உங்கள் வீட்டில் வசித்து வருகிறீர்கள் யாராவது உங்கள் வீட்டில் நுழைந்து உங்கள் வீடு மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மண் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸில் செய்த சிலையை கரைத்தால் நீங்க என்ன செய்வீர்கள், அவர்களை வரவேற்று காபி கொடுத்து உபசரிபீர்களா இல்லை கட்டை எடுத்துக்கொண்டு துரத்துவீர்களா?
கடலில் வாழும் உயிரினங்கள் கரைக்கு வந்து நம்முடன் கத்தி சண்டை போட முடியாது என்பதாலேயே அவற்றின் வாழ்வியல் பகுதியில் அத்து மீறி சென்று இதுபோன்ற செயல்களை செய்வது எந்த விதத்திலும் ஞாயமேயில்லை.
இதை விட கொடுமையானது நம்முடைய அரசாங்கமும் இதற்கு பாதுகாப்பு அளித்து கிரேன் போன்ற வசதிகளை செய்து கொடுப்பதுதான்.
இது தமிழரின் மரபு வந்த வழிபட்டு முறை என்று எனக்கு தோன்ற வில்லை, விலங்குகளை தெய்வங்களாகவே போற்றுகின்ற இந்த மண்ணில் இது போன்ற செயல்களை நிறுத்த அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஈ மற்றும் எறும்புகளுக்கு அரிசி மாவில் கோலம் போட்டு உணவளித்த தமிழர்களாகிய நாம் இது போன்ற செயல்களுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்.
கடவுளை அடையும் வழி என்பது அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துவதும் உதவி செய்வதுமேயன்றி இதுபோன்ற செயல்களில் இல்லை, இது போன்ற மண் கரைப்பை கடவுளே கூட விரும்ப மாட்டார்.
சாக்கு மூட்டையில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையார் சிலைகள்.

இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)