இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 11 ஜனவரி, 2011

ஊழல் ஒழிப்பது எப்படி

ஊழலை ஒழிப்பதற்கான சட்டப்பூர்வமான மற்றும் நிர்வாக ரீதியான ஆலோசனைகளை தெரிவிப்பதற்காக, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், எட்டு பேர் கொண்ட அமைச்சரவை கமிட்டி, கடந்த வாரம் அமைக்கப்பட்டது.
இதை போல நாமும் எழுதினால் ஒரு கற்பனை.

திருடன் எல்லாம் சேர்ந்து தலைமை திருடன் தலைமையில் தெருக்கூட்டம் போட்டங்கலாம் "திருட்டை ஒழிப்பது எப்படி".

ரம்ஜான் அன்னைக்கு நைட்டு நம்ம கறிக்கடை காதர் தலைமையில் சொற்பொழிவு, தலைப்பு "ஜீவகாருண்யம்". கூடத்துக்கு வர்றவங்களுக்கு கோழி பிரியாணி ப்ரீ.

கள்ளுண்ணாமை தலைப்பில் உரை, உரையாற்றுபவர் டாஸ்மாக் தலைவர் நெப்போலியன் IAS .

உங்களுக்கும் எதாவது இது போல தோன்றினால் எழுதுங்கள்

அத்தியாயம் - 1

நீங்க இப்ப ஒரு விவசாயின்னு வச்சுக்கிங்களேன், சும்மா ஒரு பேச்சிக்குதான்
 
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?  இப்ப, நீங்க விவசாய நிலம் வாங்கிறது அவ்வளவு ஈசியான விஷயம் இல்ல.
 
எனக்கு தெரிஞ்சு எங்க ஊர்ல ஒருத்தர் ஒரு ஏக்கர்  ருபாய் 25 ஆயிரத்துக்கு வித்தார், என்ன ஒரு 10  வருஷம் முன்ன இருக்கும், எத்தன ஏக்கர் தெரியுமா? சுமார் ஒரு 25 ஏக்கர், இப்ப அந்த நெலத்த பாத்து பேரு மூச்சுதான் விட முடியுது அவராலா.
 
ஆனா அந்த விலைக்கே அப்ப வாங்க ஆளில்ல, தேடிப்பிடிச்சு வித்து தான் பொண்ணுங்க கல்யாணத்த பண்ணார், அது ஒரு தனி கத, நம்ம மேட்டர்க்கு வருவோம்.
 
உங்களுக்கு ஒரு ஏக்கர் நிலம் இருக்கு, இப்ப அதுல நாம விவசாயம் பண்ண போறோம்.
 
என்ன பண்ணலாம், நெல் போடுவோம், ஆனா நெல் வருமா அந்த நெலத்துலன்னல்லாம் நீங்க கேக்கப்படாது, ஏன்னா உங்க தாத்தா அத தான் போட்டார் உங்க அப்பா அததான் போட்டார் நாமளும் அதையே போடபோறோம்.
 
நெல்லு நடரத்துக்கு மொதல்ல நாம நாத்து விடனும், அதுக்கு நிலத்த ரெடி பண்ணனும்.
 
நிலத்த ரெடி பண்ண முதல்ல தண்ணி விடனும், அதுக்கு முதல்ல கரண்டு இருக்கான்னு பாக்கணும்.
 
இது ஒன்னும் சென்னை இல்லங்க,  எப்படியாச்சம் கிராமத்தில இருக்கிறவன ஏமாத்தி 4  இல்லன்ன 5  மணி நேரம் கரண்டு அவனுக்கு விடாம நாமலே  எடுத்துக்கிட்டு இந்த கரண்ட பிரிச்சி inox சத்யம் தியேட்டர்னு, அஞ்சு பைசா நமக்கு புரோஜனப்படாத, எவனோ நோகாம நொங்கு திங்கறதுக கூட தெரியாம அவன் கட்டவுட்டுக்கு பால ஊத்திகிட்டு இருக்க.
 
இது கிராமம், உங்க நல்ல நேரம் உங்க வயல் மோட்டார் கொட்டகை பக்கத்திலேயே இருந்து, கரண்டும் இருந்து,  நிக்காம வந்தா ஒரு நாள் புல்லா மோட்டாரும் ஓடினா, நீங்க நாத்து நடுற வயலுக்கு தண்ணி கட்டிருவீங்க.
 
இருங்க அதுக்குள்ளே மோட்டரை ஆன் பண்ணாதீங்க, இன்னும் கால்வாயெல்லாம் செத்தி தண்ணி போற வழி சரிபடுத்தனும் அப்பத்தான் தண்ணி பிரச்சனை இல்லாம உங்க வயலுக்கு போகும்.
 
நல்ல வயல் காய்ஞ்சு போயிருந்தா, கொஞ்சம் கஷ்டமா இருக்கும், ஆனா புல்லு பூண்டெல்லாம் ஈஸியா கொத்தி எடுத்துடலாம்.
 
"என்னங்க இது உள்ள என்ன இருக்குன்னே தெரியாத அளவுக்கு செடி கொடிஎல்லாம் இருக்கு", உள்ள ஏதாவது பாம்பு தேளு இருந்து கடிச்சா.
 
யோசிச்சு பாருங்களேன் இப்ப நீங்க உங்க வசதிக்கு ஏற்ப காரோ, பைக்கோ ஓட்டிகிட்டு உங்க ஆபீஸ்ல இருந்து உங்க வீட்டுக்கு வருவீங்க உங்க வீட்டுலேயும் சிரிச்சுகிட்டோ சிரிக்காமலேயோ உங்க பை ஹெல்மெட் இத எல்லாம் உங்க கிட்ட இருந்து வாங்கிட்டு போய் அதுஅது எடத்துல வைப்பாங்க, நீங்களும் ஹாயா போய் சோபால உக்காந்து உடனே டிவி ரிமோட்ட கைல எடுத்து டிவி பாப்பீங்க, அவங்க போய் உடனே உங்களுக்கு காபி போட்டு எடுத்துக்கிட்டு வந்து கொடுப்பாங்க நீங்களும் ரசிச்சோ ரசிக்காமலோ குடிப்பீங்க.
 
இப்படி இல்லாம, உங்க பொண்டாட்டி கதவ தொறக்குரப்போ உங்கள பாம்போ தேளோ கடிச்சு, உங்கள் நாலு பேறு தூக்கிட்டு வந்து நின்னா அவங்களுக்கு எப்படி இருக்கும், இதுதாங்க விவசாயியோட நெலம.
 
ஹலோ எங்க ஓடுறீங்க, வாங்க விவசாயம் பண்ணலாம்

சனி, 8 ஜனவரி, 2011

விலைவாசி - விவசாயம் - விவசாயி - பொருளாதாரம்

என்ன காய்கறி எல்லாம் இந்த வெல விக்குது!!! என்னதான் பண்றது!!!

சாம்பார் பொரியல் எல்லாம் வைக்கறதா இல்லியா ஒன்னும் தெரியில, இந்த கவர்மென்ட்டு என்னதான் பண்ணுது,

இந்த வருஷம் எலக்ட்ஷன் மட்டும் வருட்டும் பாரேன், நான் எதிர்கட்சிக்குதான் வோட்டு  போட போறேன், பின்ன என்ன.

ஆமான் அவன் வந்தா மட்டும் என்ன பண்ண போறான், அவனுங்களும் கொள்ள தான் அடிப்பானுங்க, எவன் நம்ம கஷ்டத்த போக்க போறான் என்று புலம்புவரா நீங்கள்.

கொஞ்சம் நியூஸ் எல்லாம் சீரியல் வெளம்பர இடவேலையில லேசா கேக்குற ஆளா இருந்தா, இன்னும் கொஞ்சம் கேள்வி வரும்

"ஏம்ப்பா, இந்த கவர்மெண்டுதான் இந்த விவசாயிகளுக்கு எம்மா சலுக பண்ணுது" கரண்டு ப்ரீயாம், உரம் மானியம் தருதாம், வெத அப்புறம் லோன் எல்லாம் தள்ளுபடி பண்றாங்க,

எங்க பக்கத்து வீட்டுகாரன்களோட சொந்தகாரங்களுக்கெல்லாம் நாப்பதாயிரம் அம்பதாயிரம் தள்ளுபடியாம் அவுங்க சம்சாரம் செயின் வாங்கி போட்டு இருக்குன்னு சொல்லறாங்க.

"நமக்கும் கொஞ்ச நெலம் இருந்தா ஊருக்கு போய் விவசாயம் பாக்கலாம் போல இருக்கு" என்று சொல்லுபவரா உங்களுக்காகவே இந்த பகுதி.

இதற்கு நீங்கள் முதலில் விவசாயம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

"சும்மா நிறுத்துப்பா அப்ப பிளைட்டுல போகனுன்ன பிளைட் ஓட்ட தெரியனுமா" என்று நீங்கள் சொல்லுவது எனக்கு கேட்கிறது.

இன்னும் சில பேர் "ஹலோ நாங்கெல்லாம் மம்புட்டிய தூக்கி பாத்துட்டு முடியாமதான் இங்க வந்து இந்த வேலை பாக்குறோம் நீ சும்மா நிறுத்தப்பா" என்றும் சொல்லலாம்.

ஆன என்ன பண்ண இது ப்ளாக் என்ன தடுத்து நிறுத்த முடியாது, முடிஞ்சா படிச்சு பாத்துட்டு "என்னமோ எழுதி இருக்கார் நாமளும்தான் கருத்து சொல்வோமே" என்று உங்கள் கருத்துக்களை சொன்னால் எனக்கு சந்தோஷமே.

இனி வரும் அத்தியாயங்களில் விவசாயம் பற்றி பார்போம்